கொல்கத்தா,
இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஹைதராபாத்தின் ஒட்டுமொத்த வெற்றியும் ரஷித் கானையே சாரும் எனும் அளவிற்கு ஆடினார் ரஷித். அந்த அணியே 165 ரன்களைத்தான் எதிர்பார்த்திருந்திருக்கும். அதுவும் விக்கெட்டுகள் வீழ்ச்சியால், 160 வந்தால் போதும் என்றுதான் இருந்திருக்கும். ஆனால் கடைசி நேர அதிரடியால், அணியின் ஸ்கோரை 174 ஆக உயர்த்தினார் ரஷித் கான்.
அதேபோல், கொல்கத்தா அணியின் உத்தப்பா விக்கெட்டை வீழ்த்திய ரஷித் கான், ஒவ்வொரு கட்டத்திலும் கொல்கத்தா அணியின் அடுத்தடுத்த நம்பிக்கையாக திகழ்ந்த கிறிஸ் லின் மற்றும் ரசல் ஆகியோரை விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தாவை நிலைகுலைய செய்தார். அதுமட்டுமல்லாமல், நிதிஷ் ராணாவின் ரன் அவுட், ஷுப்மன் கில் மற்றும் சிவம் மாவியின் இரண்டு அற்புதமான கேட்ச்சுகள் என கொல்கத்தாவின் தோல்வியடைய செய்தது ரஷித் கான் தான்.
ரஷித் கான் என்ற ஒற்றை வீரரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. ரஷீத் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.