கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் ஜடேஜா விளையாடுவது சந்தேகம்;தவான் தகுதி

தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் காய்ச்சல் காரணமாக ரவீந்திர ஜடேஜே விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. தவான் உடல் தகுதி பெற்றுள்ளார். #RavindraJadeja #IndvsSA #INDvSA

தினத்தந்தி

கேப்டவுன்

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 20 ஒவர் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில், இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற குறையை விராட்கோலி தலைமையிலான தற்போதைய அணி போக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர். இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது.

முதல் நாள் போடியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக ரவீந்திர ஜடேஜா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

தொடர்ந்து அவரது உடல் நிலையை பிசிசிஐ மருத்துவ குழு கண்காணித்து வருகிறது மற்றும் கேப்டவுன் உள்ளூர் மருத்துவ குழுவுடன் தொடர்பில் உள்ளது. பி.சி.சி.ஐ. மருத்துவக் குழு உள்ளூர் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி ஜடேஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முழுவதும் குணமாக இன்னும் 2 நாட்கள் ஆகும்.

இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய வீரர் ஷிகர் தவான் தகுதி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் முன் தவானுக்கு சிறிய கணுக்கால் காயம் இருந்தது.

#RavindraJadeja | #IndvsSA | #INDvSA

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்