துபாய்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியின் முடிவு முக்கியமானதாக இருக்கும் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
ராஜஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றமாக உனட்கட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கார்த்திக் தியாகி சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஜேமிசன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கார்ட்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.