Image Courtesy : BCCI / IPL  
கிரிக்கெட்

ஐபிஎல் 2022 :அதிகம் டுவீட் செய்யப்பட்ட வீரர்களில் கோலி முதலிடம் - முதல் அணி எது தெரியுமா?

அதிகம் டுவீட் செய்யப்பட்ட வீரர்களில் தோனி 2-வது இடத்தில் உள்ளார்.

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடந்து முடிவடைந்துள்ளது. இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அறிமுக சீசனிலே குஜராத் அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நடப்பு ஐபிஎல்-லில் டுவிட்டரில் அதிகம் டுவீட் செய்யப்பட்ட அணி மற்றும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிகம் டுவீட் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் தோனி, 3-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 4-வது இடத்திலும், பெங்களூரு அணியின் கேப்டன் டு ப்ளசிஸ் 5-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

14 வருடங்களாக ஐபிஎல் கோப்பை வெல்லும் முனைப்புடன் இந்த ஆண்டும் 2-வது தகுதி சுற்று போட்டி வரை வந்து வெளியேறிய பெங்களூரு அணி தான் இந்தாண்டு அதிகம் டுவீட் செய்யப்பட்ட அணியாகும். இந்த பட்டியலில் தோனி தலைமையிலான சென்னை அணி 2-வது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்