கிரிக்கெட்

ஐ.பி.எல்: ராஜஸ்தானுக்கு எதிராக பெங்களூரு அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர்.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய எவின் லீவிஸ் சிக்சர்களாக பறக்க விட்டார். இதனால் பவர்பிளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் குவித்தது.

சிறப்பாக ஆடிய லீவிஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 37 பந்துகளில் 3 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமள வென சரிந்தது. ஒரு கட்டத்தில் 180 ரன்களை தாண்டும் என்கிற நிலையில் ஆடிக் கொண்டிருந்த ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் விக்கெட்டுகளை மளமள வென இழந்தது. பெங்களூரு அணியின் ஷாபாஸ் அகமது ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜார்ஜ் கார்டன் மற்றும் டான் கிறிஸ்டியன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்