கிரிக்கெட்

விடாமுயற்சி… இரவிலும் தீவிர வலைப்பயிற்சியில் சிஎஸ்கே கேப்டன்!

ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளநிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை,

ஐபிஎல் தொடருக்காக இரவிலும் தீவிர வலைப்பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஈடுபட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், நடப்பு ஐபிஎல் தொடரை முன்னிட்டு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இரவு நேரங்களிலும் வலைப்பயிற்சி மேற்கொண்டு தனது பேட்டிங் திறனை மேம்படுத்தி வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி எதிர்பார்த்த அளவில் செயல்படாததால், இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ருதுராஜ் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக இரவு நேரங்களிலும் நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த முயற்சியை சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக 6-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என்று ருதுராஜ் கூறியது குறிப்பிடதக்கது. ஐபிஎல் தொடர் வருகிற 31-ந்தேதி ஐபிஎல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.