கிரிக்கெட்

டி20, ஓடிஐ - அறிமுக போட்டியில் ‘ஆட்ட நாயகி’ விருது வென்ற முதல் வீராங்கனை... கெய்லா ரெய்னேக்கே சாதனை

கெய்லா ரெய்னேக்கே நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு திரில் வெற்றியை பெற்றுத்தந்தார்.

கிரைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இளம் தென் ஆப்பிரிக்க வீராங்கனை கெய்லா ரெய்னேக்கே கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு திரில் வெற்றியை பெற்றுத்தந்தார்.

269 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி, ஒரு கட்டத்தில் தடுமாறினாலும், இறுதியில் கெய்லா ரெய்னேக்கே தனது தைரியமான ஆட்டத்தால் வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி பந்தை சிக்ஸராக மாற்றி அணியை வெற்றி பெற செய்தார். அவர் 32 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த ஆட்டத்திற்காக அவருக்கு ‘ஆட்ட நாயகி’ விருது வழங்கப்பட்டது. இதன் மூலம், டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரு வடிவங்களிலும் அறிமுகப் போட்டியிலேயே ‘ஆட்ட நாயகி’ விருது பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை கெய்லா ரெய்னேக்கே பெற்றிருக்கிறார்.

Also read:’இதற்காக நீண்ட காலம் காத்திருந்தோம்’ - ஹர்திக் பாண்ட்யா

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் அறிமுகமாகி, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்ட நாயகி விருதை வென்றிருந்தார்.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி ஏப்ரல் 1-ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற உள்ளது.