கிரிக்கெட்

காயம்... அடுத்த போட்டியில் விளையாடுவாரா ரோகித் சர்மா ?

அடுத்ததாக 16-ம் தேதி மும்பை அணி பஞ்சாப்பை எதிர்கொள்ள உள்ளது.

மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி, பெங்களூரு அணியிடம்18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியுடன், மும்பை அணி இந்த சீசனில் விளையாடிய 4 போட்டிகளில் 1 வெற்றி, 3 தோல்வி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அணிக்கு மேலும் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடக்க வீரர் ரோகித் சர்மா ஹாம்ஸ்ட்ரிங் காயம் அடைந்துள்ளார். இப்போட்டியில் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த அவர், ‘ரிட்டயர்டு அவுட்’ ஆகி வெளியேறினார்.

இந்நிலையில், ரோகித் சர்மா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார். விரைவில் ஸ்கேன் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் அடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. அடுத்ததாக 16-ம் தேதி மும்பை அணி பஞ்சாப்பை எதிர்கொள்ள உள்ளது.