கோப்புப்படம் 
கிரிக்கெட்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா...!

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் நமிபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 56 (37) ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார்.

34 வயதான ரோகித் சர்மா இதுவரை 116 ஆட்டங்களில் விளையாடி 4 சதம், 24 அரைசதம் உள்பட 3,038 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் 3,227 ரன்கள் சேர்த்து முதல் இடத்தில் விராட்கோலியும் 3,115 ரன்கள் சேர்த்து இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த மார்ட்டின் கப்திலும் உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்