கிரிக்கெட்

மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா..!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒருமுறை கூட கைப்பற்றியது இல்லை.

தினத்தந்தி

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை சமன் செய்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அந்த வரிசையில் முதல் கேப்டனாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்த ஒரே இந்திய கேப்டனான மகேந்திர சிங் தோனியின் நீண்ட கால சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒருமுறை கூட கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை