Image Courtesy: @IPL / @mipaltan / @SunRisers 
கிரிக்கெட்

விராட், கெயில், டி வில்லியர்ஸ் உடன் மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா

ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை 18.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 36 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் மும்பையின் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 16 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதில் அவர் 3 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 100+ சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இணைந்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி, கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ் (பெங்களூரு மைதானம்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 100+ சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:

விராட் கோலி - சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - 130 சிக்சர்கள்

கிறிஸ் கெயில் - சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - 127 சிக்சர்கள்

ரோகித் சர்மா - வான்கடே மைதானம், மும்பை - 102 சிக்சர்கள்

SCROLL FOR NEXT