கொல்கத்தாவின் சாதனையை முறியடித்து வான்கடேவில் வரலாறு படைத்த மும்பை இந்தியன்ஸ்

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
Image Courtesy: @IPL / @mipaltan / @SunRisers
Image Courtesy: @IPL / @mipaltan / @SunRisers
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை 18.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 36 ரன் எடுத்தார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவின் மாபெரும் சாதனை ஒன்றை மும்பை அணி முறியடித்துள்ளது.

அதாவது ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் சேசிங் செய்து அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற கொல்கத்தாவின் சாதனையை முறியடித்து வான்கடே மைதானத்தில் மும்பை அணி வரலாறு படைத்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் சேசிங் செய்து அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகள் விவரம்:

மும்பை இந்தியன்ஸ் - 29 வெற்றி (47 போட்டிகள், வான்கடே மைதானம்)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 28 வெற்றி (40 போட்டிகள், ஈடன் கார்டன் மைதானம்)

ராஜஸ்தான் ராயல்ஸ் - 24 வெற்றி (31 போட்டிகள், ஜெய்ப்பூர்)

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 21 வெற்றி (32 போட்டிகள், ஐதராபாத்)

சென்னை சூப்பர் கிங்ஸ் - 20 வெற்றி (31 போட்டிகள், சேப்பாக்கம் மைதானம்)

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com