ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய தொடரை வென்று அசத்திய இந்திய அணி, நம்பர்-1 இடத்தை பெற்று அசத்தியுள்ள நிலையில், இந்திய வீரரகள் சிலரும் தங்களது தர நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 790 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசை ஆகும்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்தியா சார்பில் அதிக ரன்களை ரோகித் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் கேப்டன் விராத் கோலி நீடிக்கிறார். இதன் மூலம் டாப்-5 பேட்ஸ்மேன்களில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தவிர்த்து அஜிங்கியா ரகானே 4 இடங்கள் முன்னேறி 24வது இடத்திலும், 8 இடங்கள் முன்னேறி கேதார் ஜாதவ் 36வது இடமும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் 10வது இடத்தில் இருந்த அக்ஸர் பட்டேல் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதே போல 24 இடங்கள் முன்னேறியுள்ள சாகல் 75 வது இடமும், 9 இடங்கள் முன்னேறியுள்ள குல்தீப் யாதவ் 80 வது இடமும் பெற்றுள்ளனர்.