கிரிக்கெட்

உடற்தகுதி தேர்வில் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தேர்வு ; தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்கிறார்

பெங்களூரில் இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் வரும் ஞாயிறு அன்று தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளார்.

பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்துவிட்டு மீண்டும் களமிறங்கினா ரோகித் சாமா. முழுமையாக குணமடையாத நிலையிலேயே அவா ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதாக கூறப்பட்டது. அவா தலைமை வகித்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

எனினும், காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் ரோகித் சாமா சேக்கப்படவில்லை. இப்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளார். ரோகித் சாமாவின் உடற்தகுதி எவ்வாறு உள்ளது என்பது தொடாபாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று பரிசோதனை நடைபெற்றது. இதில் அவர் தேர்ச்சி அடைந்தார். இதையடுத்து வரும் ஞாயிறு அன்று தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளார்.

பெங்களூரிலிருந்து மும்பைக்குச் செல்லும் ரோகித் சர்மா அங்கிருந்து தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்குச் செல்கிறார். அங்கு 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்.

இதனால் 2-வது டெஸ்ட் வரை ரோகித் சர்மாவால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது. கிறிஸ்துமஸ் முடிந்த பிறகு இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். ஜனவரி 7 மற்றும் ஜனவரி 15 ஆகிய தேதிகளில் தொடங்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்டுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.