கிரிக்கெட்

இந்திய கேப்டனாக டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா...!

இந்திய கேப்டனாக டி-20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

தினத்தந்தி

புது டெல்லி,

வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 11 ( 5 பந்து ) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தசைபிடிப்பு காரணமாக வெளியேறினார். இந்த போட்டியில் ரோகித் ஷர்மா 1 சிக்ஸ் அடித்தார்.

இந்த சிக்ஸின் மூலம் கேப்டனாக டி-20 போட்டிகளில் அவரது சிக்ஸ் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் டி-20 போட்டிகளில் இந்திய கேப்டன்களில் அதிக சிக்ஸ் அடித்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி 59 சிக்ஸ், மகேந்திர சிங் தோனி 34 சிக்ஸ்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா