Image Courtacy: ICCTwitter 
கிரிக்கெட்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

டப்ளின்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தனது டுவிட்டரில், "இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது அணி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.சி.ஐ. மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்" என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.

முன்னதாக, ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததால் அவர் இங்கிலாந்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை