Image Courtesy: @SA20_League  
கிரிக்கெட்

எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; பார்ல் ராயல்ஸ் - எம்.ஐ.கேப்டவுன் அணிகள் இன்று மோதல்..!

தென் ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.

தினத்தந்தி

பார்ல்,

தென் ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டி தொடரின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - எம்.ஐ.கேப்டவுன் அணிகள் மோத உள்ளன. இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள பார்ல் ராயல்ஸ் அணி 3 வெற்றி, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேவேளையில் எம்.ஐ.கேப்டவுன் அணி 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் கடைசியாக சந்தித்த ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன் அணி வெற்றி பெற்றது.

எனவே, இந்த ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன் அணியை வீழ்த்தி பதிலடி கொடுக்க பார்ல் ராயல்ஸ் அணி கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து