image courtesy: @SA20_League 
கிரிக்கெட்

எஸ்.ஏ.20 ஓவர் லீக்; 3வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் அக்டோபரில் நடைபெறும் - வெளியான அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

கேப்டவுன்,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் பரிமாற்றம், வீரர்கள் தக்கவைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து எஸ்.ஏ.20 ஓவர் லீக்கின் 3வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி 3வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏலத்தில் வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய செப்டம்பர் 6ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்