கிரிக்கெட்

எஸ்.ஏ. டி20 லீக்: அந்த இந்திய வீரர் மட்டும் வர வேண்டாம்..ஏனெனில். - டு பிளெஸ்சிஸ்

எஸ்.ஏ. டி20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பாப் டு பிளெஸ்சிஸ் உள்ளார்.

தினத்தந்தி

கேப்டவுன்,

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் 4-வது சீசன் அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி முதல் பிப்ரவரி 24-ந்தேதி வரை தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், எம்.ஐ கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த ஆறு அணிகளையும் ஐபிஎல் அணிகளை சேர்ந்த உரிமையாளர்களே வாங்கியுள்ளனர். இந்த தொடரில் ஓய்வு பெற்ற இந்திய வீரர்களை விளையாட பல தரப்பினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான பாப் டு பிளெஸ்சிஸ் உள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டு பிளெஸ்சிஸ் இடம் எந்த ஒரு இந்திய வீரர் எஸ்.ஏ டி20 லீக்கில் விளையாட கூடாது? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், நான் எஸ்.ஏ டி20 லீக்கில் பும்ரா மட்டும் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் உலகிலேயே எதிர்கொள்ள மிகவும் கடினமான பந்து வீச்சாளர் பும்ரா. அவரை இந்த தொடரில் பார்க்க மாட்டோம் என்று நம்புகிறோம் என கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு