கிரிக்கெட்

சச்சினா..? தோனியா..? யார் சிறந்த வீரர்..? - வெங்கடேஷ் ஐயர் பதில்

வெங்கடேஷ் ஐயர் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

தினத்தந்தி

லண்டன்,

ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அறிமுகமான வெங்கடேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணிக்காக 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த இவர் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து சரியாக விளையாடாத காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முனைப்புடன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயரிடம் கிரிக்கெட் சம்பந்தமான சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் யார் சிறந்த வீரர்? சச்சினா? தோனியா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சில நொடிகள் யோசித்த வெங்கடேஷ் ஐயர், 'எம்.எஸ் தோனிதான் சிறந்த வீரர்' என்று பதிலளித்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?