கிரிக்கெட்

சிட்னி மைதானத்தில் சச்சின்-லாரா பெயரில் "கேட்" - இரு பெரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவுரவிப்பு

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் மற்றும் லாராவின் பெயரில் கேட் திறக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சிட்னி,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் மற்றும் லாராவின் பெயரில் கேட் திறக்கப்பட்டு உள்ளது.

இரு பெரும் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் லாரவைப் பெருமைப்படுத்தும் விதமாக சச்சின்-லாரா கேட் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை சிட்னி மைதானத்தில் சச்சின் அடித்ததும், வெளிநாட்டு மைதானங்களில் தனக்கு அபிமானமான மைதானம் சிட்னி என சச்சின் முன்பு கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்