கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமாக உள்ளது - யுஸ்வேந்திர சாஹல்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமாக உள்ளது என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்த உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெறாதது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹலிடம் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறாதது குறித்து கேட்ட போது, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு சற்று வருத்தமாகத்தான் உள்ளது. எனினும் வாழ்க்கையில் எதையும் கடந்து போக வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்று கொண்டிருக்கின்றேன். இது போன்றே 3 உலகக்கோப்பைகளில் இடம்பெறவில்லை. எனவே இந்த மனநிலை எனக்கு பழகிவிட்டது. என்று அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை