கோப்புப்படம் 
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமனம்

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை,

இந்திய ஏ கிரிக்கெட் அணி வருகிற 23-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு ஏ அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாட உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்கு சிதான்ஷு கோடக் தலைமை பயிற்சியாளராகவும், அசாம் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுபதீப் கோஷ் பீல்டிங் பயிற்சியாளராகவும் உள்ளனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளார்.

48 வயதான சாய்ராஜ் பகுதுலே விதர்பா, கேரளா, பெங்கால் மற்றும் குஜராத் ஆகிய அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் ஐ.பி.எல்-தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...