கிரிக்கெட்

சூர்யவன்சிக்கு ஒடிசாவின் புரி கடற்கரையில் மணற்சிற்பம் - வைரல்

வைபவின் புகைப்படத்துடன் உருவாக்கப்பட்ட அந்த மணல் சிற்பம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புரி,

இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சி, ஐபிஎல் 2026 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய வரலாறு படைத்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் அதிரடியான இன்னிங்ஸ் விளையாடிய அவர், டி20 தொடரொன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கைப்பற்றினார்.

கெயிலின் சாதனையை முறியடித்த வைபவ்

இதற்கு முன்பு இந்த சாதனையை கிறிஸ் கெயில் தக்கவைத்திருந்தார். ஐபிஎல் 2012 தொடரில் கெயில் 59 சிக்ஸர்கள் விளாசியிருந்த நிலையில், தற்போது ஐபிஎல் 2026 தொடரில் 65 சிக்ஸர்கள் அடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை நாயகனாக உயர்ந்துள்ளார்.

மணல் சிற்பம் மூலம் வாழ்த்து

இந்த வரலாற்று சாதனையை கொண்டாடும் விதமாக, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கி வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வைபவின் புகைப்படத்துடன் உருவாக்கப்பட்ட அந்த மணல் சிற்பம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT