கிரிக்கெட்

டோனி ஃபார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்; சங்கக்காரா அறிவுரை

கேப்டன் டோனி ஃபார்மில் இல்லாததே இந்த சீசனில் சி.எஸ்.கே.வின் சறுக்கலுக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்

தினத்தந்தி

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற உள்ளது. சென்னை அணியின் கேப்டன் டோனியும் தனது வழக்கமான அதிரடியை காட்ட முடியாமல் திணறி வருகிறார்.

கேப்டன் டோனி ஃபார்மில் இல்லாததே இந்த சீசனில் சி.எஸ்.கே.வின் சறுக்கலுக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா டோனி சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அவர் கூறுகையில்,

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனுக்கும் அடுத்த சீசனுக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. இப்படி நீண்ட காலத்திற்கு விளையாடாமல் இருப்பது நல்லதல்ல. சில கிரிக்கெட் தொடரில் விளையாடி டோனி தனது ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டும்.

ஒரு வீரர் ஃபார்மில் இல்லாததும் ஃபார்முக்கு திரும்புவதும் சகஜமான ஒன்றுதான். எல்லா வீரர்களும் இந்த சூழலை எதிர்கொள்வார்கள். ஆனால் ஒரு சில வீரர்களின் செய்திதான் பெரிதாக பேசப்படும். ஐபிஎல் போன்ற தலைசிறந்த கிரிக்கெட் தொடர்களில் டோனி விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது