கிரிக்கெட்

இந்த தலைமுறையின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்.. 7 இந்திய வீரர்களுக்கு இடம்

சஞ்சய் பங்கர் தேர்வு செய்த அணியில் 7 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு வீரர்கள் விளையாடி ஏராளமான சாதனைகள் படைத்து வருகின்றனர். அவர்களை வைத்து சிறந்த 11 வீரர்களைக் கொண்ட கனவு அணியை பலரும் தேர்வு செய்வது வழக்கமாகும்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பங்கர், இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களை கொண்டு உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் கேப்டனாக யாரையும் நியமிக்காத அவர், 7 இந்திய வீரர்களையும், 2 ஆஸ்திரேலியா, 1 நியூசிலாந்து மற்றும் 1 இங்கிலாந்து வீரரை தேர்வு செய்துள்ளார்.

சஞ்சய் பங்கர் தேர்வு செய்த உலக டெஸ்ட் லெவன் அணி பின்வருமாறு:-

ரோகித் சர்மா, டேவிட் வார்னர், வில்லியம்சன், விராட் கோலி, ரிஷப் பண்ட், பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, பும்ரா மற்றும் ஹேசில்வுட்.

இருப்பினும் இந்த அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி, ஸ்டீவ் சுமித் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை தேர்வு செய்யாதது பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு