கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிப்பு

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிக்கப்பட்டுள்ளார்.

லாகூர்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றுடன் மூட்டையை கட்டியதால் அதிருப்தி அடைந்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கழற்றி விட்டது. கேப்டன் 32 வயதான சர்ப்ராஸ் அகமதுவும் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் இந்த மாத இறுதியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீடிப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. ஒவ்வொரு தொடரின் அடிப்படையில் அவரை பதவியில் தொடர வைப்பதா? அல்லது நீக்குவதா? என்பதை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும். துணை கேப்டனாக 24 வயதான பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்