கிரிக்கெட்

பள்ளி கிரிக்கெட்: கோவை அணி சாம்பியன்

பள்ளி கிரிக்கெட் போட்டியில், கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தினத்தந்தி

நெல்லை,

பள்ளி அணிகளுக்கான 6-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை லேடி ஆண்டாள், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த கோவை அணி 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சிபியேந்தல் 34 ரன்னும், ஸ்ரீராம் ஈஸ்வர் 29 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு