கிரிக்கெட்

பள்ளி கிரிக்கெட்: திருப்பூர் அணி வெற்றி

பள்ளி கிரிக்கெட் போட்டியில், திருப்பூர் அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

நெல்லை,

பள்ளி அணிகளுக்கான 6-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒரு ஆட்டத்தில் திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வேலூர் கன்கார்டியாவை வீழ்த்தியது. இதில் சிவதேவன் அடித்த அரைசதத்தின் (89 ரன், 6 பவுண்டரி, 6 சிக்சர்) உதவியுடன் பிளாட்டோஸ் நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கன்கார்டியா 13 ஓவர்களில் 30 ரன்களில் சுருண்டது. இந்த வெற்றியின் மூலம் பிளாட்டோஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை லேடி ஆண்டாள் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். அணியை வென்றது. இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் சென்னை வித்யா மந்திர்-லேடி ஆண்டாள், திருப்பூர் பிளாட்டோஸ்- கோவை ராமகிருஷ்ணா ஆகிய அணிகள் மோதுகின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து