கிரிக்கெட்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி: ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு

ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்களை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே விலகி விட்டார். அவருக்கு பதிலாக அனிருதா ஜோஷி டெல்லி அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த அனிருதா ஜோஷி ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம் பெற்றிருந்தாலும், ஐ.பி.எல்.-ல் இன்னும் அறிமுகமாகவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அனிருதா ஜோஷி, ஆஃப் ஸ்பின்னும் வீசக்கூடியவர் ஆவார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் டெல்லி அணியின் பிரதான சுழற்பந்து அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக குறுகிய கால ஒப்பந்தம் அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஷம்ஸ் முலானி சேர்க்கப்பட்டுள்ளார். அக்ஷர் பட்டேல் குணமடைந்து அணியில் மீண்டும் இணையும் வரை ஷம்ஸ் முலானி நீடிப்பார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்