கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்காக புதிய சாதனை படைத்த ஸ்ரீ சரணி

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின.

மான்செஸ்டர்,

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் 12 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்ரீ சரணி பெற்றுள்ளார்.

வங்காளதேசம் 136 ரன்கள்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற குரூப்-1 பிரிவின் 23-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

இந்தியாவின் அபார சேசிங்

137 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்ரீ சரணி புதிய சாதனை

இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்ரீ சரணி, இந்த உலகக் கோப்பை தொடரில் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தினார். இதன் மூலம், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை அவர் படைத்தார்.

ஒரே தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள்

ஸ்ரீ சரணி (2026) - 12* விக்கெட்டுகள்

பூனம் யாதவ் (2020) - 10 விக்கெட்டுகள்

டயானா டேவிட் (2010) - 9 விக்கெட்டுகள்

பூனம் யாதவ் (2014) - 8 விக்கெட்டுகள்

ராதா யாதவ் (2018) - 8 விக்கெட்டுகள்