கிரிக்கெட்

சென்னை அணியால் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சாகர்... ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா ?

தீபக் சாகர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான ஏலம் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த முறை மேலும் இரண்டு அணிகள் இந்த தொடரில் இணைந்து உள்ளதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பெங்களுருவில் நடந்து முடிந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிகபட்சமாக 14 கோடி ரூபாய் கொடுத்து தீபக் சாகரை ஏலத்தில் எடுத்தது.

இதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த 3வது டி20 போட்டியில் தீபக் சாகருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது இலங்கைக்கு எதிராக நடந்துவரும் 20 ஓவர் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

அவரது காயம் தீவிரமாக இருப்பின் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இவ்வாறு நேர்ந்தால் குறைந்தது 3 மாதம் தீபக் சாகர் ஓய்வில் இருக்க நேரிடும்.இதனால் தீபக் சாகர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்