கிரிக்கெட்

ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

பிரிஸ்பேன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், பான்கிராட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடையும் பான்கிராப்டுக்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீப காலமாக ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகள் மோசமாக இருந்து வரும் நிலையில், முன்னணி வீரர்களான ஸ்மித், வார்னருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும், இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது.

மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் தங்கள் கோரிக்கைகளையும் தாக்கல் செய்தது. ஆனால், ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடை தொடரும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் எர்ல் எட்டிங்ஸ் உறுதிபட தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான தொடரில் வார்னர், ஸ்மித் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்