கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஸ்மிருதி மந்தனாவை கேப்டனாக்க வேண்டும்: முன்னாள் பயிற்சியாளர் கருத்து

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்க வேண்டுமென முன்னாள் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பெண்கள் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான டபிள்யூ.வி.ராமன் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை 25 வயதான ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்க வேண்டும். கேப்டன்ஷிப்புக்கும் வயதுக்கும் தொடர்பு கிடையாது. அவரால் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆட்டத்தின் போக்கை நன்கு கணித்து செயல்படக்கூடியவர். இந்திய அணிக்காக நீண்ட நாள் விளையாடி வருகிறார் என்று கூறினார்.

தற்போது இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக 38 வயதான மிதாலிராஜூம், 20 ஓவர் அணியின் கேப்டனாக 32 வயதான ஹர்மன்பிரீத் கவுரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு