Image Tweeted By @ProteasMenCSA 
கிரிக்கெட்

3 போட்டிகளில் 3 வெவ்வேறு கேப்டன்கள்- தென் ஆப்பிரிக்கா அணியை கிண்டல் செய்த வாசிம் ஜாபர்

தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக 3 ஒருநாள் போட்டிகளில் 3 வெவ்வேறு வீரர்கள் செயல்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

இந்த 3 ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக 3 வெவ்வேறு வீரர்கள் செயல்பட்டுள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட பவுமா, திடீர் உடல்நல குறைவு காரணமாக 2-வது போட்டியில் விளையாடவில்லை. இதனால் 2-வது போட்டியில் கேசவ் மகாராஜ் தென் ஆப்பிரிக்காவின் கேப்டனாக செயல்பட்டார்.

இதை தொடர்ந்து இன்று டேவிட் மில்லர் தென் ஆப்பிரிக்கா அணியை வழிநடத்தினார். இந்த நிலையில் 3 போட்டிகளுக்கு 3 கேப்டன்களுடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள அவர், " ஒவ்வொரு போட்டியின் டாஸின் போதும் வெவ்வேறு தென் ஆப்பிரிக்கா கேப்டன்களுடன் ஷிகர் தவான் இவ்வாறு தான் நிற்பார்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்