கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு - டேல் ஸ்டெய்ன் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களில் ஒருவரும், தனது அசாத்திய பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறன் கொண்டவருமான டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேல் ஸ்டெய்ன் 439- விக்கெட்டுகளையும், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி196 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 47 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள டேல் ஸ்டெய்ன், 64 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு