கிரிக்கெட்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 219 ரன்கள் எடுத்துள்ளது.

பர்மிங்காம்,

8வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்று பர்மிங்காமில் நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் குயிண்டன் டி காக் (33 ரன்கள்) ஹசிம் அம்லா (16 ரன்கள்) டூ பிளஸிஸ்(26 ரன்கள்) டி வில்லியர்ஸ்(0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது. மில்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆடிய போதிலும் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது.

தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் மில்லர் 75 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் அலி 3 விக்கெட்டுகளும் ஜூனைத் கான், இமாம் வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட் செய்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்