கிரிக்கெட்

ஐபிஎல்: பெங்களூரு அணி 120 ரன்கள் மட்டுமே சேர்ப்பு- ஐதராபாத் அபார பந்து வீச்சு

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.

தினத்தந்தி

சார்ஜா,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் பேட்டிங்கை துவக்கிய பெங்களூரு அணியை ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா மிரட்டினார்.

துவக்க வீரர் தேவ்த்த் பட்டிக்கல் (5 ரன்கள்) கேப்டன் விராட் கோலி (7 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழக்கச்செய்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் (24 ரன்கள்) ஏமாற்றினார். பெங்களூரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணமே இருந்தது. இதனால், அந்த அணியின் ரன் எண்ணிக்கை உயரவில்லை. நிர்ணையிக்கப்பட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை பெங்களூரு அணி சேர்த்துள்ளது. இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஐதராபாத் அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை