கிரிக்கெட்

இலங்கை பிரீமியர் லீக் போட்டி; இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் முதலாவது லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை அந்த நாட்டில் நடக்க இருக்கிறது. இதில் கொழும்பு, கண்டி, காலே, டம்புல்லா, ஜாப்னா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளில் இலங்கையை சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உள்பட 70 வெளிநாட்டு வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்