Image Courtesy: @ICC  
கிரிக்கெட்

ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற இலங்கை இளம் வீரர்

ஐ.சி.சி. ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

தினத்தந்தி

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை அடங்கிய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

இதில் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, காமிந்து மெண்டிஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதேபோல் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், அயர்லாந்தின் ஐமி மாகுவேர், யு.ஏ.இ-யின் ஈஷா ஓசா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் செப்டம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதை இலங்கையின் காமிந்து மெண்டிஸூம், செப்டம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் டாமி பியூமண்ட்டும் வென்றுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து