Image Courtesy: @ICC  
கிரிக்கெட்

ஆசிய கோப்பை தொடரில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்...வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவு - காரணம் என்ன...?

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் (50 ஓவர்) இன்று தொடங்குகிறது.

தினத்தந்தி

டாக்கா,

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் (50 ஓவர்) இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இன்று பாகிஸ்தானில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் ஆகிய அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் வங்காளதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக வங்காளதேச அணியில் 30 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் அனமுல் ஹக் பிஜோய் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். 

வங்காளதேச அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை இலங்கையை சந்திக்க உள்ளது. இந்நிலையில் லிட்டன் தாஸ் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகி உள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்