Image Tweet : England Cricket  
கிரிக்கெட்

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை..!

ஸ்டூவர்ட் பிராட் ஆஷஸ் தொடரில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 293 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் ஆஷஸ் தொடரில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். அவர் ஆஷஸ் தொடரில் 40 போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை