கிரிக்கெட்

7 முறை அவுட் ஆக்கிய யாசிர் ஷாவுக்கு சுமித் சவால்

7 முறை அவுட் ஆக்கிய யாசிர் ஷாவுக்கு சுமித் சவால் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், பிரிஸ்பேனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தேன். நான் அவுட் ஆனதும் அவர் 7 விரல்களை உயர்த்தி காட்டினார். முதலில் அது எனக்கு புரியவில்லை. பிறகு தான் அவரது பந்து வீச்சில் நான் இதுவரை 7 முறை வீழ்ந்து இருப்பதை அறிந்தேன். உண்மையில் அவரது பந்து வீச்சில் நான் ஓரிரு முறை தான் அவுட் ஆகியிருப்பேன் என்று நினைத்தேன். அவரது விரல் சைகை இப்போது எனக்குள் உத்வேகம் அளித்துள்ளது. என்னை விழித்தெழச் செய்துள்ளார். அடுத்து அடிலெய்டில் நாங்கள் சந்திக்க இருக்கிறோம். இந்த முறை நிச்சயம் எனது விக்கெட்டை எளிதாக இழந்து விடமாட்டேன் என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு