ஐதராபாத்,
8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதரபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை துவங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் சர்மா (11 ரன்கள்) ஏமாற்றினார். எவின் லெவிஸ் 29 ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷான் (9 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (28 ரன்கள்), பாண்ட்யா (15 ரன்கள்), பொல்லார்டு (28 ரன்கள்), பென் கட்டிங் (9 ரன்கள்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் வேகம் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. ஐதராபாத் அணி தரப்பில் சந்தீப் சர்மா, ஸ்டான்லகே, சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.