கிரிக்கெட்

சூப்பர் 12 சுற்று: நெதர்லாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

தினத்தந்தி

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று சிட்னி மைதானத்தில் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.

ராகுல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித்- கோலி இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். ரோகித் சர்மா அரைசதமடித்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து கோலியுடன் சூரியகுமார் யாதவ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி நடப்பு தொடரில் தனது இரண்டாவது அரைசததை பூர்த்திசெய்தார். அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவும் 25 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாட உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்