கொழும்பு,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. சூப்பர் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றி யோடு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஆவலுடன் உள்ளது.
நியூசிலாந்து அணி ஒரு வெற்றி. ஒரு முடிவில்லை என 3 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற் றால் அரையிறுதியை உறுதி செய்வதோடு, புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடிக்கும். தோற்றால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்புக் கான கதவு திறக்கும். ஆனால் ரன்ரேட்டில் நியூசிலாந்து திடமாக இருப்ப தால் தோற்றாலும் அந்த அணிக்கே அடுத்த சுற்றை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகம்.