கிரிக்கெட்

சூப்பர் 8 சுற்று: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவும் பட்சத்தில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.