சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சென்னையில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்சர் படேலும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.