கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி: குஜராத் அணியில் சுரேஷ் ரெய்னாவா..? எகிரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ஐ.பி.எல். தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் விலகியதைத்தொடர்ந்து குஜராத் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அட்டவணை இறுதி செய்துள்ள பி.சி.சி.ஐ. இந்த வாரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

ஐபிஎல் தொடங்க இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜேசன் ராய் ஐபிஎல்-ல் இருந்து வெளியேறுவதாக நேற்று அறிவித்தார். .குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. ஜேசன் ராயின் விலகல் அறிவிப்பால் தற்போது அந்த அணி மாற்று வீரரை தீவிரமாக தேடி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் டாப் 5வது இடத்தில் இருப்பவர் ரெய்னா. இவ்வளவு அனுபவம் உள்ள வீரரை ஒரே ஒரு சீசனில் நன்றாக விளையாடவில்லை என கூறி அனைத்து அணிகளும் புறக்கணித்தன.

மிஸ்டர் ஐபிஎல் என அனைவராலும் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இம்முறை சிஎஸ்கே அணிக்கூட வாங்குவதற்கு ஆர்வம் காட்டாமல் சென்றுவிட்டது. இதை அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார். மெகா ஏலத்தில், சுரேஷ் ரெய்னா விற்கப்படாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தற்போது அனுபவ வீரர் ஒருவர் தேவைப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவின் படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் இந்த ஐபிஎல் சீசனில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜெர்சியில் உள்ளார். இதையடுத்து, சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2022ல் நுழையப் போகிறார் என்றும், அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெறலாம் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும் மாற்று வீரரின் பெயரை குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னும் அறிவிக்கவில்லை.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்