கிரிக்கெட்

'முக்கியமான தருணங்களில் அசத்தக்கூடியவர் சூர்யகுமார்' - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங்

சூர்யகுமார் போன்ற வீரரால் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க முடியும் என ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார்.

தினத்தந்தி

துபாய்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்த ஒரு பேட்டியில், 'இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் எப்படி அதிரடியாக விளையாடுவார் என்பதை அனைவரும் அறிவோம். அவருக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும்.

ஏனெனில் அவரை போன்ற வீரரால் உலகக்கோப்பையை வென்று கொடுக்க முடியும். அவரது பேட்டிங் கொஞ்சம் சீரற்ற வகையில் இருக்கலாம். ஆனால் முக்கியமான தருணங்களில் அசத்தக்கூடியவர். மறைந்த ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் எப்படி ஆஸ்திரேலிய அணிக்காக செயல்பட்டாரோ அதே போன்று தான் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்.

இவரை போன்ற வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, அணியில் பங்களிப்பு, தேவை என்ன என்பதையும் தெளிவாக சொல்லி விளையாட வைத்தால் போதும். தனிநபராக அணிக்கு வெற்றியை தேடித்தருவார். அந்த அளவுக்கு சூர்யகுமார் ஒரு மேட்ச் வின்னர். அவரை இந்திய அணியில் 5-வது வரிசையில் விளையாட வைக்க வேண்டும்' என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்